உங்களுக்கு தெரியுமா?… உலகின் ஐந்து முட்டாள்கள் யார்?..

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு  இராஜன்கானின் blog -ல் இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!…

Advertisements

Tags: , , , , , , , , , ,

About Rajankhan

Hi!... என் பெயர் இராஜன், ஆனால் என்னை சிவா என்றும் இராஜா, இராஜி என்று கூப்பிட்டவர்களே அதிகம். இதில் விதவிதமான பட்ட பெயர்கள்( கரியன், கருவாயன், கரிஷ்மா ). நடிகர் அஜித் மற்றும் இந்தியன் கிரிக்கெட் player Zaheer Khan ரசிகன் என்பதால் என்னை “தல” மற்றும் “இராஜன்கான்” என அழைப்பவர்களும் உண்டு. நான் புக்கத்துறை என்ற கிராமத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த வருடம் என் பள்ளியில் நான்தான் Student Number 1 . பிறகு வேடந்தாங்கல் அருகில் உள்ள வேடவாக்கம் என்னும் கிராமத்துக்கு மாறினோம். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் Diploma Computer Engg ., படித்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. Final Year ( 2008 ) படிக்கும் போது Campus Interview -வில் select ஆகி Chennai -யில் Web Designing வேலை செய்கிறேன். கவிதை, கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன். 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு கிரிக்கெட்டில் bowling போடவே பிடிக்கும். மெதுவாக உருண்டு வரும் பந்தை கூ ட விழுந்து fielding செய்வேன். ஏனோ தோட்டம் என்ற பெயரில் பல பல செடிகளை நட்டு அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் கொள்ளை பிரியம். சிறு வயதில் இருந்தே நான் என் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்ததால் என்னவோ எனக்கு கூட்டத்தில் இருப்பதை விட தனிமையே அதிகம் பிடிக்கும். எல்லோரிடமும் கொஞ்சம் கூட பேசாதவன் என்றாலும் பேசும் சிலரிடம் அதிகமாக பேசுவேன். மொத்தத்தில் நான் ஒரு “Reserved Character” .

One response to “உங்களுக்கு தெரியுமா?… உலகின் ஐந்து முட்டாள்கள் யார்?..”

  1. ashok says :

    i accept this friend………………..@

கருத்துகளை தெரிவிக்கவும்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: